Posts

Showing posts from November, 2016

வாரியர் டயட் என்றால் என்ன?

Image
மிக எளிமையான ஒரு விளக்கம். 'உண்டபின்பு உழைப்பு" என்ற தற்போதைய மாடர்ன் உணவு முறையை... நம் தமிழக முன்னோர்களை போன்று காலையில் "உழைத்த பின்பு மாலையில் உணவு" என்ற நிலைக்கு மாறுவதே என்று மட்டும் இப்போதைக்கு எளிமையாக புரிந்து கொள்ளுங்கள் ! என் மூன்று ஆண்டு பயிற்சியில் சொல்கிறேன்... படிப்படியாக பழகவேண்டியது இம்முறை. சைக்கிள் ஓட்ட பழகியது போல ! வாருங்கள் பழகுவோம் ! இயல்பாக இயற்கையாக ! நிறைய புதுமுகங்கள். அதுவும் பேலியோ குழுமங்களில் இருந்து ! கொஞ்சம் பேர் கம்பு, கார்ப் என்றெல்லாம் பயந்துபோய் இருக்கிறார்கள். சிலர் வாரியரின் அடிப்படையே தெரியாமல் கேட்கிறார்கள். உங்களுக்காக இந்த சின்ன விளக்கம். 1. வாரியர் உணவுமுறையில் எல்லாவிதமான உணவுகளும் சாப்பிடலாம். கொழுப்பு, கார்ப், புரோட்டீன், தானியங்கள், அரிசி, கோதுமை, பயறுவகைகள், பழங்கள் , கொட்டைகள், கிழங்குகள் உள்பட. எதை எப்படி எந்த எந்த நேரங்களில் என்ன விதமான கலவைகளில் சாப்பிடலாம் என்று கற்றுத்தரும் ஒரு முறையே வாரியர் உணவுமுறை. It is not a restrictive diet !! தீண்டாம இல்லாத உணவுமுறை !! மனதுக்கும் இந்த உணவுமுறை