Sunday, December 11, 2016

தற்போது டயட் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வாரியர் சாம்பியன் Nun Amen Ra

ஆம். இணையத்தில் மிகப் பரபரப்பான டயட் விவாதங்கள் இந்த உலக வளுதூக்கும் சாம்பியனை மையமாக வைத்துதான் இந்த மாதத்தில் நடக்கிறதாம் மேற்குலகில். ஒரு நாளைக்கு 1200 கலோரிகள் முதல் 1500 கலோரிகள் மட்டுமே சாப்பிடுகிறேன் என்று சொல்லும் இந்த வாரியர் வளுதூக்கும் சாம்பியன் விலங்குணவுகளை தவிர்த்து ஒரு நாளைக்கு இரவு மட்டுமே தாவர உணவுகளை உண்ணுகிறார். ஒரு நாளில் ஒரு மணிநேரம் மட்டுமே உணவுக்கென்று ஒதுக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.அவரது உலக சாம்பியன் ரெக்கார்டு பற்றிய காணொலி !

Saturday, November 12, 2016

மாற்றத்தை நோக்கி

யாரெல்லாம் வாரியர் உணவுமுறைக்கு வர இருக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் ஒரு மாதம் சாப்பிடவேண்டிய pre warrior guidelines இதுதான் !! நாம் எந்த மாற்றத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் நாம் இப்போது இருக்கும் இடத்தில் இருந்தே தொடங்கவேண்டும் என்றே எனது இயற்கை வாழ்க்கை முறை உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் சொன்னால் Gradual & Smooth Changes/transition!

##1. காலை டீ காபி குடிப்பவர்களாக இருந்தால் இன்று முதல் எப்பொழுதும் போடும் சர்க்கரையின் அளவில் பாதியை மட்டும் போட்டு குடிக்கவும். பனைவெல்லம் நாட்டு கரும்பு சர்க்கரை என்று மாறுதல் சிறப்பு.

#2. காலை உணவுக்கு முன்பாக ஒரு கப் வெள்ளரி, கேரட் தக்காளி உப்பு மிளகுத்தூள் சலாட் ஒரு கப் சாப்பிட்டுவிட்டு 30 நிமிடங்கள் கழித்து வழக்கமாக சாப்பிடும் உணவை சாப்பிடலாம்.

#3. இதேபோல மதிய உணவுக்கு அரைமணி நேரம் முன்பாக ஒரு கப் பப்பாளி அல்லது ஆப்பிள் அல்லது அன்னாச்சிபழம் சாப்பிட்டபின்பு லஞ்சை சாப்பிடவும். ஒரே ஒரு கண்டிசன். அரிசி சாதத்துக்கு சரி பங்கு.. காய்கறிகள் கீரைகள் பருப்புகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கூட்டு பொறியல், துவையல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

#4. மாலை 4 முதல் 6 மணிக்குள் எல்லா ஸ்னாக்சையும் ஓரங்கட்டிவிட்டு ஒரு கப் ஏதாவது ஒரு சுண்டல் ! வழக்கமாக அருந்தும் டீ காபி !!

#5. 8 - 10 உங்களுக்கு பிடித்த அனைத்து சைவ அசைவ உணவுகளையும் வழக்கம்போல சாப்பிடலாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிசன்.. காலை சாப்பிட்டமாதிரி ஒரு கப் வெஜிடபிள் சலாட்டையும் மதியம் சாப்பிட்ட 1கப் புரூட் சலாட்டையும் சாப்பிட்டுவிட்டு 30 நிமிடம் கழித்து உங்கள் டின்னரை சாப்பிடலாம் !

சியர்ஸ் & ஆல் த பெஸ்ட்

Monday, November 7, 2016

காலை நீராகாரம் - மூலிகை தீர்த்தம்

துளசித்தீர்த்தம் எப்படி செய்வது என்று நண்பர் அன்வர் அவர்கள் கேட்டிருக்கிறார். தீர்த்தங்கள் செய்ய தாமிரப்பாத்திரங்கள் அல்லது மண்பாத்திரங்கள் ஏற்றவை. நான் மண்பாத்திரங்களை விரும்புபவன்.

இரவு ஒரு கைப்பிடி துளசி இலைகளை அல்லது ஒரு கொத்து துளசியை நன்றாக கழுவிவிட்டு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அதன்பின்பு ஓரிரு மல்லிகை மலர்களையும் போட்டு மூடிவைத்துவிடவேண்டும். அதிகாலை எழுந்து பல்துலக்கி வெறும் வயிற்றில் முதலில் ஒரு மிடக்கு சாதாரண நீரை விழுங்கிவிட்டு பூக்கள் இலைகளை விலக்கி தீர்த்தங்கள் அருந்துவது சிறப்பு. இயன்ற அளவு கையில் ஊற்றி உறிஞ்சிகுடிக்கவும். உதடுகள் நனைவதும் சுவையோடு அதன் நறுமணத்தை நுகரவும் இது ஒரு அற்புதமான வழி ! 

துளசிக்கு பதில் மலைநெல்லிக்காயையும் சிறுசிறுதுண்டுகளாக வெட்டி போட்டும் தீர்த்தம் செய்யலாம். நான் முல்லைப்பூ, ரோஜா இதழ்கள், நாவல்கொழுந்து, வேப்பங்கொழுந்து போன்றவற்றிலும் தீர்த்தங்கள் செய்வது வழமை.

நாவறட்சி, தொண்டை வறட்சி, துர்நாற்றம், கபம் போன்ற அன்றாட சிறுபிரச்சினைகளுக்கு ஒரு இயற்கை தீர்வு . அன்றாடம் வழக்கமாக்கிக்கொள்ளவேண்டிய முதல் நீராகாரம் இது !