வாரியர் டயட் என்றால் என்ன?






மிக எளிமையான ஒரு விளக்கம். 'உண்டபின்பு உழைப்பு" என்ற தற்போதைய மாடர்ன் உணவு முறையை... நம் தமிழக முன்னோர்களை போன்று காலையில் "உழைத்த பின்பு மாலையில் உணவு" என்ற நிலைக்கு மாறுவதே என்று மட்டும் இப்போதைக்கு எளிமையாக புரிந்து கொள்ளுங்கள் ! என் மூன்று ஆண்டு பயிற்சியில் சொல்கிறேன்... படிப்படியாக பழகவேண்டியது இம்முறை. சைக்கிள் ஓட்ட பழகியது போல ! வாருங்கள் பழகுவோம் ! இயல்பாக இயற்கையாக !


நிறைய புதுமுகங்கள். அதுவும் பேலியோ குழுமங்களில் இருந்து ! கொஞ்சம் பேர் கம்பு, கார்ப் என்றெல்லாம் பயந்துபோய் இருக்கிறார்கள். சிலர் வாரியரின் அடிப்படையே தெரியாமல் கேட்கிறார்கள். உங்களுக்காக இந்த சின்ன விளக்கம்.

1. வாரியர் உணவுமுறையில் எல்லாவிதமான உணவுகளும் சாப்பிடலாம். கொழுப்பு, கார்ப், புரோட்டீன், தானியங்கள், அரிசி, கோதுமை, பயறுவகைகள், பழங்கள் , கொட்டைகள், கிழங்குகள் உள்பட. எதை எப்படி எந்த எந்த நேரங்களில் என்ன விதமான கலவைகளில் சாப்பிடலாம் என்று கற்றுத்தரும் ஒரு முறையே வாரியர் உணவுமுறை. It is not a restrictive diet !! தீண்டாம இல்லாத உணவுமுறை !! மனதுக்கும் இந்த உணவுமுறையில் இடம் உண்டு !! மனசுக்கு திருப்தியாக சாப்பிடப்பழக்கும் கலை என்றும் சொல்லுவேன்.

2. எனது "வாரியர் டயட், ஓர் அழகிய உணவுப் பயணம்" புத்தகத்தில் எப்படி 3 நேர இப்போதைய உணவுப்பழக்கத்திலிருந்து படிப்படியாக வாரியருக்கு மாறுவது என்பதை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறேன்.

3. பேலியோவில் இருந்து நேரடியாக மீண்டும் கார்ப் முறைக்கு போய் எடை அதிகரித்து பின்பு அதே சுழலில் மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அதே சமயம் நமது அனைத்து பாரம்பரிய உணவுகளையும் சாப்பிடவேண்டுமென்றால் வாரியர் உணவுமுறை மட்டுமே உங்களுக்கு உதவும். அதையும் எனது புத்தகத்திலேயே தெளிவாக எடுத்துக்கூறியுள்ளேன். அவர்கள் என் புத்தகத்தை வாங்கி (புத்தகம் வாங்க வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 9994622423) முழுமையாக படித்து புரிந்தபின்பே தானியங்களை பழங்களை பயறுவகைகளை அதில் சொல்லியபடி எடுக்கவும். பேலியோ குழுமத்தில் வாங்கிய டயட் சார்ட்டோடு இங்கு வந்து இதில் உள்ளவற்றையும் சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம்.

4. வாரியர்களுக்கு பொதுவாகவே கார்ப் கொழுப்பு இன்சுலின் பைட்டிக் ஆசிட் பயமெல்லாம் இல்லை. எல்லாவகை உணவுகளையும் கலந்துகட்டி அடித்து கட்டுடலை இழக்காமல் கொழுப்பையும் கரைத்து தசைநார்களை புதுப்பிக்கும் கலை அறிந்தவர்கள் நாங்கள். இவைகளை பற்றியெல்லாம் அடிப்படை பாடங்கள் முதல் அட்வான்ஸ்டு பாடங்கள் வரை வாரியரில் இருக்கின்றன . எனவே நன்றாக புரிந்து இறங்கவேண்டிய விசயம் வாரியர். உடல் பற்றிய இயங்கியல் / வாரியர் உடற் பயிற்சிகள் பற்றிய ஒரு புரிதல் வரும்வரை பொறுமை காக்கவும். புரிந்துகொண்டால் இதைவிட எளிமையான செலவு குறைந்த வேறுடயட்டே இல்லை என்று சொல்லுவீர்கள். 

5.வாரியர் உணவுமுறையின் நான்கு படி நிலைகள்
நஞ்சு நீக்கம் -
கொழுப்பு எரிப்பு -
தசைக்கட்டுமானம்-
நீள்வாழ்க்கை

எனவே பொறுமையாக  இங்கு பதியப்படும் கருத்துக்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும் ! அவை பெரும்பாலும் அனைவருக்கும் உதவும் வாழ்க்கைமுறை உடற்பயிற்சி சார்ந்த பதிவுகளாகவே இருக்கும். கேள்விகள் நேரம் வரும்போது அவசியம் கேள்விகளை கேட்கலாம். டயட்டிற்கு படிப்படியாக மாறுவோம். பொறுமை நன்று. வாழ்க இயற்கை நலத்துடன்.


புத்தகம் வாங்க வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளவேண்டிய எண் +919994622423

Comments

Popular posts from this blog

வாரியர் உடற்பயிற்சி "குட்டி'க் கதை :