Posts

Showing posts from July, 2017

வாரியர் உடற்பயிற்சி "குட்டி'க் கதை :

Image
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு ஒரு போட்டி அறிவிக்கனும்னு தோணுச்சாம். அறிவிச்சிட்டார். யார் முதலில் ஒரு நன்றாக வளர்ந்த மாட்டை (3வயது) தோளில் சுமத்து 100 அடி நடக்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று. எல்லா பயில்வான்களும் மாட்டைத்தூக்கி பயிற்சி செய்ய கிளம்பினார்கள். ஒத்தாசைக்கு பல அடியாத்களோடு முயற்சித்தாலும் அது அவ்வளவு ஒன்றும் சுலபமாக இல்லை. மாடுகளும் மிரண்டன. பலர் இது முடியாத வேலை என்று முயற்சியை கைவிட்டனர். இந்த நிகழ் வுகளை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒரு புத்திசாலி விவசாயிக்கு ஒரு ஐடியா உதித்தது. நேரே வீட்டுக்குச்சென்றான். வீட்டில் கட்டப்பட்டிருந்த 1 மாதமே ஆன கன்றுகுட்டியை தோளில் வைத்து தினமும் 100 அடி நடக்க ஆரம்பித்தான் ! :-) warrior diet says slow and winning ways should be your choice for a long term benefit. எப்படி இன்றைய குட்டி'க்கதை?! நேற்று 20 தோப்புக்கரணம் முடியாதவர்களுக்கு இந்த குட்டிக்கதை டிப். ஆரம்பியுங்க பயிற்சியை... :-)