Wednesday, July 19, 2017

எடையைவிட முக்கியம் கொழுப்பின் சதவிகிதம்





வாரியர் வகுப்பறையில் நாம் ஏதோ ஒரு உணவுமுறையை உடற்பயிற்சியை, எடைகுறைப்பை மற்றும் கற்க இருக்கிறோம் என்று மட்டும் நினைத்திருந்தால் கொஞ்சம் உங்கள் எண்ணத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு நான் பல பல ஆண்டுகளாக ஆய்வுகளில் இருக்கும் இயற்கை மற்றும் குறைதாக்க வாழ்க்கை முறை பயிற்சிகளும் சேர்ந்தே அளிக்கப்படும் ஒரு அபூர்வ வகுப்பறை. டயட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் அல்லது வாரியர் டயட்டில்லாமல் வேறு டயட்டுகளில் இருப்பவர்கள் கூட நிறைய விசயங்களில் புதிய புரிதல்கள் கிடைக்கப்பெறுவார்கள். உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் பிரித்து தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

வாரியர் ஆசான் ஓரி அவர்கள் எடைக்குறைப்பு என்பதற்குப்பதில் கொழுப்பைக்குறைத்தல் என்ற வார்த்தையையே அதிகம் உபயோகித்தார். ஏன் என்று ஆராய்ந்தால் நமது உடையில் தசை எழும்பு நீர் போன்ற மற்ற எடைகளால் பெரிய பிரச்சினகள் இப்போது இல்லை. எனவே இந்த கொழுப்புதான் மிகப்பெரிய பிரச்சினை ! நம் உடலின் மொத்த எடையில் கொழுப்பு எவ்வளவு இருந்தால் நாம் எப்படி தோற்றமளிப்போம் என்று பார்ப்போமா ? ஒரு ஆணின் உடலை உதாரணமாக இன்று !
பிகு: நான் அனேகமாக 40% லிருந்து 20% க்கும் கீழாக வாரியரால் மாறியிருக்கிறேன். இப்போது வெயிட்டை அளப்பதை விட கண்ணாடி முன்னால் நின்று கண்களால் அளப்பதுதான் நடக்கின்றது !

No comments:

Post a Comment