Wednesday, July 19, 2017

செயல்வழிக்கற்றல் , எடைக்குறைவு பயிற்சி :


 
 
யாருக்கெல்லாம் எந்தவிதமான உடல்நலக்குறைபாடும் இல்லை ஆனால் உடல் எடையை குறைக்கணும் அல்லது அழகாகனும் என்கிறீர்களோ அவர்கள் எல்லாம் கைதூக்குங்கள் என்று சொல்லியிருந்தேன். 200 பேருக்கு பக்கம் கைத்தூக்கியிருந்தார்கள். வாரியர் உணவுமுறையில் எடைக்குறைப்பு என்பதைவிட கொழுப்புகுறைப்பு (Fat Loss) என்றே சொல்லுவார் ஆசான் ஓரி.

வாரியர் உணவுமுறையில் டயட் சார்ட்டுகளென்று சொல்வது இல்லை. ஆனால் கைடுலைன்ஸ்கள் உண்டு. அதை உங்களுக்கு தகுந்தவாறு சின்ன சின்ன மாற்றங்களோடு மனதுக்கு பிடித்ததாய் மாற்றிக்கொள்ளவேண்டும்.

வாரியர் உணவுமுறையில் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு மனதுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பதும் முக்கிய அறிவுறுத்தல். ”காலையில் நூறு பாதாமை தட்டில் எடுத்து வைத்தாலே உமட்டிக்கோண்டுவரும் செல்லா... என்னசெய்ய இளைக்கணும்னு கண்ணைமூடிக்கிட்டு சாப்பிட்டுப்பார்த்தேன்.ஒரு மாசத்துக்கு மேல முடியலை.. விட்டுட்டேன். மறுபடியும் எடை கூடிவிட்டது.” என்று சொன்னார் ஒரு திருப்பூர் தோழி. அந்த மாதிரி நிச்சயம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் வாரியர் உணவை. இங்கு அதன் நிறங்கள், சுவைகள், கடி பதங்கள் (நொறுக்ஸ்) போன்றவை இருக்குமாறு கலந்து ரசனையோடு மனதுக்கு பிடித்ததாக அளவாக அதே ச்மயம் சத்தான உணவாகவே சாப்பிடவேண்டும் என்று சொல்வார் ஆசான் ஓரி. ஒரு சலாட்டாக இருந்தாலும் லன்ச் மெயின் மீலாக இருந்தாலும் இரவு உணவாக இருந்தாலும் இதை வலியுறுத்துவார்.

அடுத்ததாக எந்த மாற்றத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் நாம் இப்போது இருக்கும் இடத்தில் இருந்தே தொடங்கவேண்டும் என்றே எனது இயற்கை வாழ்க்கை முறை உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் சொன்னால் Gradual & Smooth Changes/transition. வாரியர் ஆசான் ஓரியும் இம்மாதிரியான மென்மையான மாற்றங்களையே கடைபிடிக்க சொல்கிறார். என்ன அவசரம் வாழ்க்கையில்? ;-). சரி உணவுக்கு வருவோம். வாரியர் டயட் சார்ட் இப்படித்தான் இருக்கும் !! கவனமாக படித்து ஒரு நோட்டில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

##1. காலை டீ காபி குடிப்பவர்களாக இருந்தால் இன்று முதல் எப்பொழுதும் போடும் சர்க்கரையின் அளவில் பாதியை மட்டும் போட்டு குடிக்கவும். பனைவெல்லம் நாட்டு கரும்பு சர்க்கரை என்று மாறுதல் சிறப்பு. அதையும் விட சர்க்கரை இல்லா கிரீண்டீக்கு மாறுதல் மிகச்சிறப்பு !

#2. காலை உணவுக்கு முன்பாக ஒரு கப் வெள்ளரி, கேரட் தக்காளி உப்பு மிளகுத்தூள் சலாட் என்றூ உங்களுக்கு பிடிட்ட பச்சை காய்கறிகளாலான சலாட் ஒரு கப் சாப்பிட்டுவிட்டு 30 நிமிடங்கள் கழித்து வழக்கமாக சாப்பிடும் உணவை சாப்பிடலாம்.

#3. இதேபோல மதிய உணவுக்கு அரைமணி நேரம் முன்பாக பப்பாளி அல்லது ஆப்பிள் அல்லது அன்னாச்சிபழம் என்று ஒரு கப் சாப்பிட்டபின்பு லஞ்சை சாப்பிடவும். காரணம் அவற்றில் இருக்கும் Food Enzymes. அப்புறம் வழக்கம்போல சாப்பாடு. ஒரே ஒரு கண்டிசன். அரிசி சாதத்துக்கு சரி பங்கு.. காய்கறிகள் கீரைகள் பருப்புகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கூட்டு பொறியல், துவையல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். சிறுதானிய தயிர் சாதமும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

#4. மாலை 4 முதல் 6 மணிக்குள் எல்லா ஸ்னாக்சையும் ஓரங்கட்டிவிட்டு ஒரு கப் ஏதாவது ஒரு சுண்டல் (அல்லது ஒரு முட்டை) வழக்கமாக அருந்தும் டீ காபி !!

#5. 8 - 10 உங்களுக்கு பிடித்த அனைத்து சைவ அசைவ உணவுகளையும் வழக்கம்போல சாப்பிடலாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிசன்.. காலை சாப்பிட்டமாதிரி ஒரு கப் வெஜிடபிள் சலாட்டையும் மதியம் சாப்பிட்ட 1கப் புரூட் சலாட்டையும் சாப்பிட்டுவிட்டு 30 நிமிடம் கழித்து உங்கள் டின்னரை சாப்பிடலாம் !

இந்த டயட் உணவுமுறையோடு காலை மாலை தோப்புகரணம் மற்றும் உங்களது வாக்கிங் உடற்பயிற்சிகளையும் 14 நாட்கள் தொடரவும்.

சியர்ஸ் & ஆல் த பெஸ்ட்.

பிகு: 3 நேரமும் வழக்கமா சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடவும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதையும் குறைக்கவே சொல்லவில்லையே என்றெல்லாம் கேட்காதீர்கள் ! அதெல்லாம் வாரியர் ரகசியம். 2 வாரம் இதேமுறையில் தொடருங்கள் ! ;-)

No comments:

Post a Comment